செய்தி தமிழ்நாடு

கிராம மக்களை துரத்தி துரத்தி பழி வாங்கிய தேனீக்கள்

திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இ கிராமத்தை சுற்றிலும்  கருவேல மரங்கள் வளர்ந்து அடர்ந்து காணப்படுகிறது.

அப்பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது பெரிய தேன் கூண்டை கண்ட சிறியவர்கள் கல்லை தூக்கி தேன்கூட்டில் எரிந்ததால் கூண்டில் இருந்த ராட்சத தேனீக்கள்  வாசுதேவன், ராதா,

தேவகுமார், சூர்யா, அன்னை மரியா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோரை கடுமையாக கொட்டியதால் மயக்கம் அடையும் நிலை ஏற்பட்டதால் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிராமத்தினரை தேனீக்கள் கொட்டிய சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அந்த சிசிடிவி காட்சியில் தெருவில் நடந்த கிராம மக்கள் அனைவரும் தேனீக்களை கைகளால் தள்ளியும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு ஓடி வீட்டுக்குள் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது,

மேலும் இரு சக்கர வாகனத்தில் வருபவர்களையும் தேனீக்கள் விடாமல் கொட்டும் காட்சியும் பதிவான நிலையில் கிராமத்தினர் தீப்பந்தங்களுடன் தேனீக்களை அகற்றும் காட்சியும் பதிவாகி திருவள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

(Visited 3 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!