செய்தி தமிழ்நாடு

கிராம நிர்வாக அலுவலர் படுகொலை காட்டுமிராண்டிகளை கைது செய்ய வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம் கிராம நிர்வாக அலுவலர் படு கொலை செய்த காட்டுமிராண்டிகளை உடனே கைது செய்து உச்சபட்ச தண்டனையை பெற்றுத்தர வேண்டும் – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் – நிறுவனத் தலைவர் – சா.அருணன் – வலியுறுத்தல்
~~~
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது.56). நண்பகலில் தன்னுடைய அலுவலகத்தில் பணியில் இருந்த போது,மணல் கடத்தல் கும்பலால் வெட்டப்பட்ட நிலையில், வெட்டுக்காயங்களுடன் பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும்,அச்சத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது

நேர்மையாகவும் துணிச்சலாகவும் தன் கடமையை செய்யும் அதிகாரிகளுக்கு இந்த நிகழ்வு எதிர்காலத்தில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் பணியாற்றினால் இந்தநிலை தான் ஏற்படும் என்ற அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது

ஆதலால் நேர்மையாகவும் துணிச்சலாகவும் அச்சமின்றி பணியற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் , இந்த கொடூர கொலை குற்றவாளிகளை கைது செய்து இனி இதுபோன்ற கொடூர செயலில் ஈடுப்படுபவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் வகையில் கைது நடவடிக்கையை மேற்கொண்டு தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்

வீர மரணம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் இரங்கலையும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்

மேலும் குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு தனிப்படை அமைத்தும் மரணமடைந்த கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்திற்கு ரூ. 1 கொடி நிவாரண நிதியும் அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நின்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

(Visited 2 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி