காலை தரிசனம் மாசி மக தரிசனம்
அருள்மிகு காசி விஸ்வநாதர் கும்பகோணம்)
சுப கிருது வருடம் :
மாசி மாதம் 22 ஆம் நாள் !
மார்ச் மாதம் : 06 ஆம் தேதி !
(06-03-2023)
திங்கட்கிழமை !
சூரிய உதயம் :
காலை : 06-30 மணி அளவில் !
சூரிய அஸ்தமனம் :
மாலை : 06-26 மணி அளவில்
இன்றைய திதி : வளர்பிறை :
சதுர்த்தசி..
மாலை 05-00 மணி வரை ! அதன்பிறகு பௌர்ணமி !
இன்றைய நட்சத்திரம் :
மகம்..
பின் இரவு 01-00 மணி வரை,அதன்பிறகு ஆயில்யம் !!
யோகம் :
நன்றாக இல்லை !!
இன்று
கீழ் நோக்கு நாள் !
இன்று
மகர ராசிக்கு சந்திராஷ்டமம் !!
ராகுகாலம் :
காலை : 07-30 மணி முதல் 09-00 மணி வரை !!
எமகண்டம் :
காலை 10-30 மணி முதல் 12-00 மணி வரை !!
குளிகை :
மதியம் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !!
சூலம் : கிழக்கு !
பரிகாரம் : தயிர் !!
கரணம் :
காலை: 09-00 மணி முதல் 10-30 மணி வரை !
நல்ல நேரம் :
மதியம் :
12-00 மணி முதல் 02-00 மணி வரை !
03-00 மணி முதல் 04-00 மணி வரை !
மாலை :
06-00 மணி முதல் 09-00 மணி வரை !
இன்றைய சுப ஓரைகள் :
புதன் ஓரை :
காலை : 12-00 மணி முதல் 01-00 மணி வரை !!
இன்று
பௌர்ணமி !
இன்று
பௌர்ணமி கிரிவலம் !!
பௌர்ணமி விரதம்,பௌர்ணமி பூஜை முதலியவானவை நாளைக்குத்தான் !
இன்று
மாசி மகம் !
மாசி மாதத்தில் பௌர்ணமியுடன் வரக்கூடிய மக நட்சத்திர நாள் மிகச் சிறப்பான நாளாகும் !
மாசி மகத்தன்று பல கோவில்களில் சுவாமி கடலில் தீர்த்தவாரி நடக்கும் !
தீர்த்தங்களுடன் அமைந்த பெரும்பாலான கோயில்களில் இந்நாளில் தெப்பத் திருவிழா நடக்கும் !
மக நட்சத்திரத்தை பித்ருதேவ நட்சத்திரம் என்று அழைப்பார்கள்.
எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும் பித்ருக்களை வணங்கினால் அந்த சுபநிகழ்ச்சி தடையில்லாமல் நடக்கும்.
பித்ருதேவனின் ஆசியும் கிடைக்கும். அதனால்தான் மாசிமகம் தினத்தன்று பித்ருக்களுக்கு பூஜை செய்ய வேண்டும் !
இன்று..
புனித நதிகளில் நீராடுவதை பிதுர் மகா ஸ்நானம் என்கிறது சாஸ்திரம்…!
ஒரு காலத்தில் வருண பகவானை பிரமஹத்தி தோஷம் பிடித்திருந்தது. அது அவரை கடலுக்குள் ஒளித்து வைத்திருந்தது.
அதிலிருந்து விடுபட சிவபெருமானை வேண்டினார். அவரும் வருணனை காப்பாற்றி அவரை விடுவித்த தினம் மாசி மகம்…!
அதனால் இந்த தினத்தில் புண்ணிய நதி, குளங்களில் புனித நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் தீரும்…!!
கும்பகோணம் காசி விஸ்வநாதர் அருளாளே இன்றைய நாளும் திருநாளாகட்டும்..
சௌஜன்யம்..!
அன்யோன்யம் .. !!
ஆத்மார்த்தம்..!
தெய்வீகம்..!.. பேரின்பம் …!!