காலியில் பொலிஸ் அதிகாரியின் வீட்டில் துப்பாக்கிச் சூடு
காலி, நாகொட வலகும்புர பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று (02) பிற்பகல் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியின் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த இருவர், அவரது மடிக்கணினி மற்றும் கைத்தொலைபேசியை எடுத்துக்கொண்டு வானில் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.





