கருங்கடலில் விழுந்த விமானத்தின் பாகங்கள் மீட்கப்படவில்லை – அமெரிக்கா தெரிவிப்பு!
ரஷ்ய போர் விமானத்தால் தாக்கப்பட்ட அமெரிக்க ஆளில்லா விமானம் கருங்கடலில் இருந்து மீட்கப்படவில்லை என்பதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ட்ரோனின் ப்ரொப்பல்லர் தாக்கப்பட்டதால் அது கடலில் விழுந்தது.
பாதுகாப்பு ஆய்வாளர் பேராசிரியர் மைக்கேல் கிளார்க், இரண்டு விமானங்களும் வௌ;வேறு வேகத்தில் பறந்ததால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது எனவும் ஆகையால் இது விபத்து என்றே நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதருக்கு நேற்று சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, தூதருக்கு அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
(Visited 2 times, 1 visits today)