கனடா மோசமான நாடு என சாடும் அமெரிக்க ஜனாதிபதி

கனடா மிகவும் மோசமான நாடுகளில் ஒன்றாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவுக்கு அமெரிக்கா ஆண்டுக்கு 200 பில்லியன் டொலர் மானியம் வழங்குவதால் அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக கனடா இருக்க வேண்டும் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் இதனைக் கூறியிருந்தார்.
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போருக்கு மத்தியில் ட்ரம்ப் இவ்வாறான சர்ச்சை கருத்துகளைக் கூறியுள்ளார்.
கனடாவின் பொருட்கள் எதுவும் தேவை இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 3 times, 1 visits today)