இலங்கை

திருகோணமலை ரொட்டவெவ: கசிப்பு மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது!!

சட்டவிரோதமான முறையில் கசிப்பு மற்றும் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகள் தீவிரம்.

திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் கசிப்பு மற்றும் கஞ்சா போதை பொருளுடன் மூன்று இளைஞர்களை இன்றிரவு (27) கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அதே பகுதியைச் சேர்ந்த 20 ற்கும் 30இற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களில் குறித்த இளைஞர்கள் கஞ்சா மற்றும் கசிப்பு போதை பொருட்களை பாவித்து
வருவதாக பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக பொலிஸார் வீடொன்றினை சுற்றி வளைத்த போது குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடம் இருந்து கசிப்பு மற்றும் கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை அப்பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர் பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் பாடசாலையை விட்டு இடைவிலகிய மாணவர்களை நட்பு வட்டமாக ஒன்று சேர்த்து மாதத்தில் ஒருமுறை மஹதிவுல்வெவ குளத்திற்கு அழைத்துச் சென்று ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை பழக்கி வருவதாகவும் புலன் விசாரணைகளில் மூலம் தெரிய வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

AJ

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!