ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டத்தால் சர்ச்சை
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டத்தால் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.
மலேசியா, காடுகளை அழிப்பதன் தொடர்பிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டத்தைச் சாடியிருக்கிறது.
அந்தச் சட்டம் தனது செம்பனை எண்ணெய்த் துறைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மலேசியா குறிப்பிட்டுள்ளது.
காடுகளை அழித்த நிலத்திலிருந்து விளையும் பொருள்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒன்றியத்திற்குள் எண்ணெய் வித்துகளின் சந்தையைப் பாதுகாக்கும் நோக்கிலேயே புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மலேசியத் துணைப் பிரதமர் ஃபதில்லா யூசஃப் கூறினார்.
புதிய சட்டம், மலேசியாவின் சிறிய விவசாயிகளையே அதிகம் பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவும் இந்தோனேசியாவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டத்திற்கு முறையான பதில் அளிப்பது குறித்து யோசித்து வருகின்றன.
செம்பனை எண்ணெய் உற்பத்தியில் அந்த இரு நாடுகளும் முன்னணி வகிக்கின்றன. அதனை அதிகம் இறக்குமதி செய்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.
இரு நாடுகளின் அமைச்சர்களும் அடுத்த மாத இறுதியில் பிரசல்ஸில் ஐரோப்பிய ஆணையத்துடன் பேச்சு நடத்தவிருக்கின்றனர்.