எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை சந்திக்க பிரான்ஸ் பிரதமர் தீர்மானம்
புதிய ஓய்வூதிய சட்டத்திற்கு எதிராக பல வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை சந்திக்க பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் திட்டமிட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஓய்வூதியச் சீர்திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், ஓய்வூதிய வயதை இரண்டு ஆண்டுகள் உயர்த்தும், இறுதி நாடாளுமன்ற வாக்கெடுப்பு இல்லாமல் அரசாங்கம் இந்த மாதம் சட்டத்தை நிறைவேற்றிய பின்னர் வன்முறையாக மாறியது.
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சட்டத்தை ரத்து செய்யவோ அல்லது தாமதப்படுத்துவதையோ நிராகரித்துள்ளார்.
மசோதாவுக்கு போதுமான வாக்குகளை அரசாங்கம் பெற்றுக்கொள்ள தவறியதை அடுத்து, பாராளுமன்றத்தில் புதிய ஆதரவைக் கோரவும் அவரது பிரதமரை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் போர்ன் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்திக்க உள்ளதாகவும் , மேலும் தொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளார் எனவும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.