இந்தியா செய்தி

எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு : மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அ.ம.மு.க. பிரமுகர் ராஜேசுவரன் தவறாக விமர்சித்து பேசிய நிலையில், இரு கட்சியனருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.

இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இது தொடர்பாக இருதரப்பிலும் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அ.ம.மு.க. பிரமுகர் ராஜேசுவரன் அளித்த புகாரின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், செந்தில்நாதன் எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் மீது, அ.தி.மு.க.வினர் கொடுத்த புகாரின்பேரில் ராஜேசுவரன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள், ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தி.மு.க. அரசு மற்றும் போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

(Visited 6 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி