ஊழல் அரசாங்கங்களை பிணையெடுப்பது மாத்திரமே சர்வதேச நாணயநிதியத்தின் நோக்கம் – டில்வின் சில்வா
ஊழல் அரசாங்கங்களை பிணையெடுப்பது மாத்திரமே சர்வதேச நாணயநிதியத்தின் நோக்கம் என ஜேவிபி தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான நிதிய உதவி திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ள ஜேவிபியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா மேற்படி கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் தற்போது அனுமதியளித்துள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் இலங்கையின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தசாப்த காலப்பகுதியில் அனுபவித்த மிக மோசமான நாணய நெருக்கடி காரணமாக பணம்சம்பாதிப்பதற்கான வாய்ப்பு இல்லாமலிருந்த அமைச்சர்களிற்கு தற்போது சர்வதேச நாணயநிதியத்தின கடனை தொடர்ந்து புதிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 2 times, 1 visits today)