விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில் 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் (7-11) மாதம் இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த இறுதி போட்டியில் விளையாட இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளது.

இந்தப் போட்டிக்கு இன்னும் ஒன்றரை மாதம் கால அவகாசம் உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான 17 பேர் கொண்ட அணியை அறிவித்தது.

இந்த நிலையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அணி விவரம் ;

இந்திய அணி வீரர்கள்

ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே எல் ராகுல், கேஎஸ் பாரத் (வி.கே.), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது.  ஷமி, முகமது.  சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.

ஆஸ்திரேலியா அணி வீரர்கள்

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியான், மிட்செல் மார்ஷ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.

 

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ