உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ஜெர்மனியில் உயர்மட்ட பேச்சுவார்த்தை
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் தீவிரமடைந்து வருவதாக கூறப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, அமெரிக்க தூதுவர்கள் மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் ஜெர்மனியில் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கத்திய பாதுகாப்பு உத்தரவாதங்கள் கிடைத்தால், நேட்டோவில் இணையும் தனது இலட்சியத்தை கைவிட தயாராக இருப்பதாக செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஆனால் முக்கிய விவகாரங்களில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது இன்னும் தெளிவாகவில்லை என கூறப்படுகிறது.
இதனிடையே, போர் நிலை தொடர்கிறது. உக்ரைன் அதிகாரிகளின் தகவலின்படி, ரஷ்யா ஒரே இரவில் 153 ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
இதேவேளை, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், தங்களின் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் 130 உக்ரேனிய ட்ரோன்களை அழித்ததாக தெரிவித்துள்ளது.





