உக்ரைன் குழந்தைகளை மீட்க ஐரோப்பிய ஒன்றியம் புதிய முயற்சிகளை முன்னெடுப்பதாக அறிவிப்பு!

ரஷ்யாவால் கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கும் நோக்கில் ஐரோப்பிய ஆணையம் புதிய முயற்சிகளை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த திட்டத்தை ஆரம்பிப்பதற்காக போலந்துடன் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்வதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் கடந்த மாதம் ஐசிசி நீதிமன்றம் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு பிறப்பித்த பிடியாணையை நியாயப்படுத்தியது.
இதேவேளை உக்ரைனின் மீட்பு அமைப்பான சேவ் உக்ரைன் அமைப்பு ரஷ்யாவில் இருந்து 31 குழந்தைகளை மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 4 times, 1 visits today)