உக்ரேன் மீது தீவிர தாக்குதல் – 9 பேர் பலி, பலர் காயம்

உக்ரேனில் பேருந்து ஒன்றின் மீது ரஷ்யா மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
உக்ரேனின் தெற்கு-மத்திய நகரமான மர்ஹானெட்ஸ் பகுதியில் இன்று காலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 30 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரேன் தெரிவித்துள்ளது.
போர்நிறுத்தம் தொடர்பிலான கலந்துரையாடல்கள் நடைபெற்றுவரும் நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 2 visits today)