உக்ரேன் ஜனாதிபதியுடன் நீண்ட நேரம் உரையாடிய அமெரிக்க ஜனாதிபதி

உக்ரேன் ஜனாதிபதியுடன் சுமார் ஒரு மணித்தியாலங்கள் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் இந்த கலந்துரையாடல் மிகவும் சிறந்ததென அமெரிக்க ஜனாதிபதி விபரித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்காவுக்கு உக்ரேன் ஜனாதிபதி விஜயம் மேற்கொண்ட போது இடம்பெற்ற கலந்துரையாடலை விடவும் முற்றிலும் மாறுபட்ட வகையில் நேற்றைய கலந்துரையாடல் இடம்பெற்றதாகத் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளார்.
இதன்போது சவுதி அரேபியாவில் முன்மொழியப்பட்ட 30 நாள் போர் நிறுத்தம் தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த கலந்துரையாடல் தொடர்பில் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், போர் நிறுத்த முயற்சிகள் சரியான பாதையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், உக்ரேனுக்கு மேலதிகமாக வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒப்புக் கொண்டதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.