ஈரான் மக்களுக்கு எதிரான வன்முறை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது – ஐ.நா
ஈரான் மக்களுக்கு எதிரான வன்முறை அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் (Volker Turk ) தெரிவித்துள்ளார்.
ஈரானின் அரசு ஊடகங்கள் அண்மையில் 100 க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஆனால் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர்.
ஈரான் இணைய சேவைகளை ஐந்தாவது நாளாக துண்டித்துள்ள நிலையில் போராட்டங்கள் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொருளாதார நெருக்கடி, கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் தனிமனித சுதந்திரப் பறிப்பு ஆகியவற்றிற்கு எதிராக இந்த போராட்டங்கள்
முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





