இஸ்ரேலில்போராட்டம்; பிரதமர் நெதன்யாகு அதிரடி திட்டம்!
நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலில் வரலாறு காணாத போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இஸ்ரேலில் புதிதாக நீதித்துறையினை கட்டுப்படுத்தம் வகையில் புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.அதன்படி அரசு நியமிக்கும் ஓன்பது பேர் கொண்ட குழுக்கள் மூலமாகத்தான் நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என சட்ட வரைவு கொண்டு வரப்பட்டது.
இதற்கு எதிராக எதிர்கட்சி தலைவர்களும் ,இஸ்ரேல் மக்கள் என சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடந்த சில நாட்களாக போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டமனது இஸ்ரேல் வரலாற்றில் பெரும் போராட்டம் என்று கூறப்படுகின்றது.
இதன்படி கடந்த சனிக்கிழமை நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆகவே நீதிபதிகளை நியமிக்கும் சட்ட மசோதாவை மாறியமைக்க பிரதமர் நெதன்யாகு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.