இலங்கையில் 30 இலட்சம் கோழிகள் பலி: முட்டைப் பற்றாக்குறை!
சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கால் சுமார் 30 இலட்சம் (3 மில்லியன்) முட்டையிடும் கோழிகள் பலியாகியுள்ளன.
இதனால், நாடு முழுவதும் முட்டைப் பற்றாக்குறை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
சீதுவை, ரட்டோலுகமவில் அமைந்துள்ள சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜயவர்தன(Jayawardena) அவர்கள், நிலவும் சூழல் குறித்த முக்கிய கருத்துக்களை வெளியிட்டார்.
ஏற்கெனவே சந்தையில் முட்டையின் விலை உயரத் தொடங்கியுள்ளதாகவும், நிலைமையைச் சமாளிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பேக்கரி தொழிலுக்கு அத்தியாவசியமான பொருட்களான மா, சீனி, முட்டை மற்றும் மார்ஜரின். இதில் முட்டைப் பற்றாக்குறை ஏற்பட்டால், அது பேக்கரிப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்தும் அல்லது முழுத் தொழிலையும் ஸ்தம்பிக்க வைக்கும் அபாயம் உள்ளது.
மேலும் வருடாந்திர கேக் விற்பனையில் சுமார் 25% வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு 2026 பண்டிகைக் காலத்தில் தான் நடக்கும்.
முட்டைப் பற்றாக்குறை, பண்டிகைக் கால விநியோகங்களை மிகப் பெரிய அளவில் பாதிக்கும் என்று அவர் எச்சரித்தார்.
முட்டைப் பற்றாக்குறையின் தாக்கம் நுகர்வோர் மற்றும் பேக்கரித் தொழிலைப் பாதிக்காமல் தடுக்க, பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜயவர்தன அரசாங்கத்தை வலியுறுத்தினார்:
தற்போதைய நிலைமை குறித்து ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும். முட்டைப் பற்றாக்குறைக்கு மாற்றுத் தீர்வுகளைக் கண்டுபிடித்து, அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்



