85 சதவீதம் வாடிக்கையாளர்களின் மின்சாரம் மீட்கப்பட்டன
சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த காரணமாகத் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளில், சுமார் 85 சதவீதம் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளன என்று இலங்கை மின்சார சபையின் (CEB) பிரதிப் பொது முகாமையாளர் நோயல் பிரியந்தா(Noel Priyantha) தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று (டிசம்பர் 04) அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
நாட்டில் உள்ள சுமார் 7 மில்லியன் மின் வடிக்கையாளர்களில், 3.9 மில்லியன் வடிக்கையாளர்களுக்கான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
இதில் சுமார் 85% வாடிக்கையாளர்களின் மின்சாரம் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது.
அனர்த்தத்தின்போது, 16,771 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன.
அவற்றில் 14,549 மின்மாற்றிகள் ஏற்கனவே சீரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
எஞ்சியுள்ள துண்டிக்கப்பட்ட இணைப்புகள் கூடிய விரைவில் சீர்செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த மீட்பு நடவடிக்கைகளின்போது, ஒரு மின்சார ஊழியர் உயிரிழந்துள்ளார் என்ற கவலைக்குரிய தகவலையும் பிரதிப் பொது முகாமையாளர் வருத்தத்துடன் தெரிவித்தார்.




