இலங்கை தேர்தலில் நிராகரிக்கப்பட்ட ஜெர்மனிய பெண்

இலங்கையில் நடைபெறும் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த ஜேர்மன் பெண்ணின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை – கலேவல பகுதியில் போட்டியிடவிருந்த இலங்கை குடியுரிமை பெற்ற ஜேர்மன் பெண் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
வேட்புமனு தாக்கல் செய்யும் செயற்பாடு நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் அவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான காரணங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெளிநாட்டு பெண் ஒருவர் ஒருவர் போட்டியிட முன்வந்தது முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
(Visited 5 times, 1 visits today)