இலங்கை காலநிலை தொடர்பில் விசேட எச்சரிக்கை!
இலங்கையில் இன்றைய தினமும் அதிகரித்த வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நிலவும் தென்மேல் பருவப்பெயர்ச்சி மழை காரணமாக நாடளாவிய ரீதியில் இந்த நிலைமை காணப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.
இதேவேளை அரபிக் கடலில் நிலவும் பலத்த காற்றுடனான வானிலை காரணமாகக் குறித்த பகுதிக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் கடற்றொழிலாளர்களை அறிவுறுத்தியுள்ளது.