இலங்கை – இந்தியா பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்!
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஏப்ரல் 29ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
காரைக்கால் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகம் வரை இந்த சேவை இயக்கப்படும்.
காங்கசந்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க கடற்படையின் ஒத்துழைப்புடன் புதிய பயணிகள் முனையம் நிர்மாணிக்கப்படும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.
இந்த பயணிகள் சேவையின் தொடக்கத்துடன், ஒரே தடவையில் சுமார் 150 பயணிகள் ஒரு கப்பலில் பயணிக்க முடியும் எனவும், பயண நேரம் சுமார் 4 மணித்தியாலங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
ஒரு முறை பயணிப்பதற்காக பயணி ஒருவரிடமிருந்து 50 அமெரிக்க டொலர் அறவிடப்படும் என்பதோடு, ஒரு பயணிக்கு அதிகூடியதாக 100 கிலோ பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.