இலங்கை – அமெரிக்காவுக்கு இடையில் வரி அதிகரிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை

ஏற்றுமதி மீதான பரஸ்பர தீர்வை வரிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை அழைக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார்.
நேற்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை அமெரிக்காவுடன் சரியான நேரத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிந்ததால், இப்பேச்சுவார்த்தையில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 180 நாடுகளுக்கு வர்த்தக வரியை அறிவித்தார்.
அதன்படி, அமெரிக்காவிற்கான இலங்கை ஏற்றுமதிக்கு 44 % வரி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 1 times, 1 visits today)