இலங்கையில் மீண்டும் அதிகரித்த முட்டை விலை – உணவுப்பொதி விலையிலும் மாற்றம்
இலங்கையில் கடந்த சில நாட்களாக சந்தையில் வீழ்ச்சியடைந்திருந்த முட்டையின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
சந்தையில் முட்டை ஒன்றின் விலை 36 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக முட்டை விலை 28 ரூபாவாக குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தற்போதைய அரிசி விலைக்கு அமைய எதிர்காலத்தில் உணவுப்பொதி ஒன்றின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்ற.
அநுராதபுர மாவட்ட சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 5,200 மெற்றிக் டன் அரிசியின் இரண்டாவது தொகுதியான 580 மெற்றி டன் அரிசி நேற்று நாட்டை வந்தடைந்தது.
(Visited 3 times, 1 visits today)