இலங்கையில் மக்கள் பிரதிநிதிகளுக்குரிய பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல்!
மக்கள் பிரதிநிதிகளுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்துவார் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் கருத்துரைத்த அவர், ” வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது. அதன் அடிப்படையில் துப்பாக்கிதாரிகள் மற்றும் அவர்களை இயக்கியவர்களை விரைவில் கைது செய்ய முடியும் என எதிர்பார்க்கின்றேன்.
மக்கள் பிரதிநிதிகளுக்குரிய பாதுகாப்பு நடவடிக்கை சம்பந்தமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெளிவுபடுத்துவார்” எனத் தெரிவித்துள்ளார்.
(Visited 2 times, 2 visits today)





