இலங்கையில் பெண் வைத்தியரை துஷ்பிரயோகம் செய்த மர்ம நபர்கள்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ஒருவரை இனந்தெரியாத நபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (10) மாலை 6.30-6.37 மணிக்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்திற்கு முகங்கொடுத்த வைத்தியர் 32 வயதானவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்றைய தினம் தனது கடமைகளை முடித்துக் கொண்டு, அரசாங்கம் வைத்தியர்களுக்கு வழங்கிய தங்குமிடத்திற்குச் சென்ற அவர், அங்கு இந்த வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரியவருகிறது.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். .
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில், அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதுவரையில் முழுமையான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அங்குள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்