இலங்கையில் நிலநடுக்க அபாயம் அதிகரிக்கிறது
இலங்கையின் தென்பகுதியில் இருந்து 900 மற்றும் 1000 கிலோமீற்றர்களுக்கு இடையில் புதிய புவியியல் எல்லையை உருவாக்கும் அபாயம் உள்ளதாக புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எம்.ஜே.ஏ.அஜித்பிரேம தெரிவித்துள்ளார்.
புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் ஒரு புதிய டெக்டோனிக் எல்லையை உருவாக்கினால், பூகம்பங்களின் போக்கு அதிகரிக்கும் என்று ஊகிக்கிறது.
இலங்கை இயற்கையாகவே அதிர்ஷ்டமான நாடு என்றும், கடுமையான நிலநடுக்க அபாயம் இன்னும் குறைவாகவே உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த வருடத்திற்குள் மாத்திரம் 9 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை நாட்டின் உள்பகுதிகளில் ஏற்பட்டதாகவும், எஞ்சிய நிலநடுக்கங்கள் நாட்டின் கரையோரங்களில் ஏற்பட்டுள்ளதாகவும், ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், கடந்த 4 மாதங்களில் 9 நிலநடுக்கங்கள் பதிவானது இதுவே முதல் முறை என குறிப்பிட்டார்.