இலங்கையில் நிலநடுக்கம் – வவுனியா உள்ளிட்ட பிரதேசங்களில் உணரப்பட்டதாக தகவல்

வவுனியாவில் நேற்று இரவு நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு 10.55 முதல் 11.10 மணி வரையான காலப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா, மெதவச்சி உள்ளிட்ட பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
பல்லகலை, மஹகனந்தரவ மற்றும் ஹக்மன ஆகிய நிலநடுக்க மையங்களில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
(Visited 27 times, 1 visits today)