இலங்கையில் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் : 83 பேர் கைது!
இலங்கையில் நாடளாவிய ரீதியில் இன்று (17.12) பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று ஒரேநாளில் 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரு.திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தேக நபர்களில் 45 பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வருபவர்கள் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





