இலங்கைக்கு கடந்த 20 வருடங்களில் 8 பில்லியன் யூரோவை நன்கொடையாக வழங்கியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம்
கிராமப்புற அபிவிருத்தி, நல்லிணக்கம் ஆகியவற்றில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு உதவியுள்ளதாகவும், பசுமைப் பொருளாதாரம் மற்றும் சமூக ஒற்றுமையை ஸ்தாபிப்பதில் மேலும் உதவுவதற்கு முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுக் குழுவின் தூதுதுவர் டனிஸ் சைபி தெரிவித்தார்.
கடந்த 20 வருடங்களில் ஐரோப்பிய ஒன்றியம் மீளச் செலுத்தத் தேவையற்ற அல்லது நிபந்தனைகள் அற்ற நன்கொடையாக 8 பில்லியன் யூரோவை இலங்கைக்காக வழங்கியிருப்பதாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
ஆசியாவில் ஜனநாயகத்தின் தாயாக இலங்கை விளங்குகிறது என தாம் நாம்புவதாகவும், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் இலங்கையின் மீள்தன்மை ஜனநாயகம் எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்துக்காட்டுகிறது என்றும் தூதுவர் குறிப்பிட்டார்.
(Visited 5 times, 1 visits today)