இராணுவம் எப்போது பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை பிரதமரே தீர்மானிப்பார் – ட்ரம்புக்கு ஸ்டாமர் பதில்
பிரித்தானிய இராணுவம் எப்போது பயன்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பிலான இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பு பிரித்தானிய பிரதமரையே சார்ந்தது என ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கு தொடர்பான நிலைப்பாட்டுக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வார இறுதியில் பிரதமரை மீண்டும் விமர்சித்ததைத் தொடர்ந்து அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
மத்திய கிழக்குக்கு விமானம் தாங்கிக் கப்பல்களை அனுப்புவது குறித்து பிரித்தானியா பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், ஏற்கனவே வெற்றி பெற்ற பிறகு போரில் இணையும் நாடுகள் எங்களுக்குத் தேவையில்லை” என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இதனிடையே ஸ்டார்மர் ட்ரம்புடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் உரையாடல் தொடர்பான விபரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.





