செய்தி வட அமெரிக்கா

இரகசிய இராணுவ ஆவணங்கள் கசிவு – உச்சக்கட்ட நெருக்கடியில் அமெரிக்கா

அமெரிக்காவின் இரகசிய இராணுவ ஆவணங்கள் இணையத்தில் கசிந்த சம்பவம் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள பின்விளைவுகளைச் சமாளிக்க அந்நாட்டு அரசாங்கம் முற்படுகிறது.

பத்தாண்டுக்கு முந்திய Wikileaks சம்பவத்துக்குப் பிறகு, மிகக் கடுமையான பாதுகாப்பு மீறல்களில் ஒன்றாக அது கருதப்படுகிறது.

அண்மை நாட்களில் பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் ஏராளமான ரகசிய ஆவணங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

பல ஆவணங்கள் உக்ரேன் போருடன் தொடர்புடையவையாகும்.

இந்தச் சம்பவம், அமெரிக்கத் தேசியப் பாதுகாப்புக்கு மிகக் கடுமையான அபாயம் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

ஆவணங்கள் எங்கிருந்து வெளியிடப்பட்டன, அவை உண்மையானவையா என்பதை உறுதிசெய்ய, அமெரிக்க அரசாங்க அமைப்புகள் முற்படுகின்றன.

(Visited 5 times, 1 visits today)

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி