ஐரோப்பா செய்தி

இனி இந்த நாட்டு மாணவர்களைச் சேர்க்க முடியாது எனப் பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு!

ஃபைனான்சியல் டைம்ஸ்’ (Financial Times) பத்திரிகையில் வியாழக்கிழமை வெளியான ஒரு கட்டுரையின்படி தெற்கு ஆசிய நாடுகளில் உள்ள இரண்டு நாடுகளின் பட்டபடிப்புக்கான விண்ணன்களை நிராகரிக்கும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள்.

ஒன்பது உயர்கல்வி நிறுவனங்கள்,, “நம்பகத்தன்மை” கொண்ட மாணவர்களை மட்டுமே சேர்ப்பதாகவும், “அதிக ஆபத்துள்ள” (high-risk) நாடுகளிலிருந்து விண்ணப்பங்களைப் பெறுவதை நிறுத்தியுள்ளன என்பதையும் உறுதியளித்துள்ள.

பிரித்தானியாவில் சில பல்கலைக்கழகங்கள் பங்களாதேஸ் மற்றும் பாக்கிஸ்தான் மாணவர்களின் விண்ணப்பங்களை நிராகரிப்பதாக தெரிவிக்கின்றன.

வோல்வஹாம்டன் பல்கலைக்கழகம் (University of Wolverhampton): இந்த நாட்டில் உள்ள இரண்டு நாடுகளிலிருந்தும் இளங்கலை விண்ணப்பதரர்களை (undergraduate applicants) ஏற்றுக்கொள்வதை நிறுத்தியுள்ளது.

ஸன்டர்லேண்ட் மற்றும் கோவென்ட்ரி பல்கலைக்கழகங்கள் (Sunderland and Coventry Universities): இந்த இரு பல்கலைக்கழகங்களும் குறிப்பிட்ட சில நாடுகளிலிருந்து ஆட்சேர்ப்பதை (recruitment) இடைநிறுத்தம் செய்துள்ளன.

லண்டன் மெட்ரோபொலிடன் பல்கலைக்கழகம் (London Metropolitan University): பங்களாதேஸ் மாணவர்களின் விண்ணப்பங்களை நிறுத்தியதை இந்த நிறுவனம் உறுதிப்படுத்தியது. இதற்குக் காரணமாக, தங்கள் பல்கலைக்கழகத்தின் விசா மறுப்புகளின் (visa refusals) எண்ணிக்கையில் 60 சதவீதம் வங்காளதேசத்தைச் சேர்ந்த மாணவர்களின் விண்ணப்பங்களே என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, மாணவர் விசா முறையைத் துஷ்பிரயோகம் செய்வதைத் தடுப்பதற்கான பிரித்தானியாவின் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.

பிரித்தானிய அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய விதிகளால், மேலும் பல உயர்கல்வி நிறுவனங்கள் “அதிக ஆபத்துள்ள” நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் இருந்து மாணவர் சேர்ப்பை இடைநிறுத்தம் செய்துள்ளன.

இந்த முடிவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், பங்காளதேஸ் மற்றும் பாக்கிஸ்தான் போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

AJ

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!