இந்தியா சென்ற விமானத்தில் ஏற்பட்ட ஆபத்து – உயிர் தப்பிய பயணிகள்

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து சென்னைக்கு இன்று சென்ற விமானத்தின் டயர் திடீரென வெடித்தமையால் பரபரப்பு நிலை ஏற்பட்டது.
எனினும் தெய்வாதீனமாக விமானத்தில் இருந்த அனைத்த பயணிகளும் பத்திரமாக உயிர் தப்பியுள்ளனர்.
சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானம் தரையிறக்கப்படுவதற்கு முன், அதன் டயரில் கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டறிந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அவர் விமான நிலைய அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் கொடுத்தார். ஓடுதளத்தில் உரிய முன்னேற்பாடுகளுடன் விமான நிலைய பணியாளர்கள் இருந்தனர்.
டயரில் கோளாறு ஏற்பட்ட நிலையில், சாதுரியமாக செயல்பட்ட விமானி அசம்பாவிதம் ஏற்படாத வகையில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
(Visited 1 times, 1 visits today)