ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் கடும் பனிப்பொழிவு : வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!

இங்கிலாந்தில் இன்று (புதன்கிழமை) பனிபொழிவு பதிவாகியுள்ளது. இதன்படி இங்கிலாந்தின் தென் பகுதிகளில் பனிப்பொழிவுடன் மழையுடனான காலநிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட் ஒஃபீஸின் அறிவுறுத்தலின்படி, ஸ்கொட்லாந்தில் இன்று வெப்பநிலை 1 பாகை செல்ஸியசை எட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கார்டிஃபில் 3 பாகை செல்ஸியசாகவும், லண்டனில் 4 பாகை செல்ஸியசாகவும் பதிவாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு மேல் பதிவாகியுள்ளதால் வாரம் முழுவதும், எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக வாகன சாரதிகள் அவதானமாக செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அடிப்படை உடல்நலன் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டை குறைந்தபட்சம் 18 பாகை செல்ஸியஸ் வரை சூடாக வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி