இங்கிலாந்தின் டோர்செட்டில் வாகன விபத்து – இருவர் உயிரிழப்பு
தென்மேற்கு இங்கிலாந்தில் டோர்செட் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கார்கள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பூல் பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 57 வயதுடைய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
எவ்வாறாயினும் இரண்டு வாகனங்களிலும் பயணிகள் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.





