ஆஸ்திரேலியாவில் பொது போக்குவரத்து சேவைகளில் ஏற்படவுள்ள மிகப்பெரிய மாற்றம்
ஆஸ்திரேலியா – குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் அல்லது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்திக் கூட கட்டணத்தைச் செலுத்த முடியும் என்று மாநிலப் பிரதமர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே, 55 பேருந்துகளில் புதிய கருவிகள் பொருத்தப்பட்டு, அடுத்த சில மாதங்களில் சோதனைகள் தொடங்கப்பட உள்ளன.
குயின்ஸ்லாந்தில் உள்ள ரயில்வே நெட்வொர்க்கில் ஸ்மார்ட் டிக்கெட் முறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களும் எதிர்காலத்தில் பொது போக்குவரத்து சேவைகளில் பல புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்த உள்ளன.
(Visited 5 times, 1 visits today)