ஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
ஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கம்பளை – ஹெம்மாதகம வீதியில் பயணித்த கார் ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் ஆஸ்திரேலிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
ஹெம்மாதகம நோக்கி செல்லும் வீதியின் பலத்கமுவ பகுதியில் சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் சுமார் 12 அடி பள்ளத்தில் விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
விபத்தில் காரின் சாரதியும் இரண்டு அவுஸ்திரேலிய பெண்களும் காயமடைந்துள்ளதுடன், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 67 வயதுடைய அவுஸ்திரேலிய பெண் எனவும், சாரதி உறங்கியமையே விபத்துக்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.