ஆசியாவை வாட்டி வதைக்கும் வெப்பம் – பேராசிரியர் வெளியிட்ட தகவல்
ஆசியாவை வெப்ப அலை, கடந்த சில வாரங்களாக வாட்டி வதைக்கும் நிலையில் மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
இலங்கை, பங்களாதேஷ், இந்தியா, சீனா, தாய்லந்து உள்ளிட்ட நாடுகளில் இதுவரை இல்லாத அளவில் வெப்பநிலை எட்டியுள்ளது.
பங்களாதேஷில் கடந்த வாரம் 60 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை பதிவானது. இந்தியாவில் வெப்பப் பாதிப்பால் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் Chengdu, Nanjing, Hangzhou போன்ற வட்டாரங்களில் இம்மாதம் முன்னெப்போதும் இல்லாத அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில்எப்போது மழை பெய்யும், சூடு தணியும்? என்று ஆசிய மக்கள் காத்திருக்கின்றனர்.
தெற்காசியா, மத்திய ஆசியா போன்ற இடங்களில் மழைப் பருவம் தொடங்குவதற்கு முன் வெப்பநிலை வெகுவாக அதிகரிப்பது வழக்கம்.
இம்முறை ஏற்பட்டுள்ள வெப்ப அலை வழக்கத்துக்கு மாறானது என்றும் அதைப் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தியுள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கத்துக்கு மாறான வெப்பத்தால் விலங்குகளும் சிரமப்படுகின்றன.
பல்லுயிர் சூழல்கள் நெருக்கடியைச் சந்திப்பதாக மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் புவியியல், பூமி,வளிமண்டல அறிவியல் பள்ளியின் ஓய்வுபெற்ற கௌரவப் பேராசிரியர் David Karoly குறிப்பிட்டுள்ளார்.
குளிரூட்டும் வசதியோ நிழலும் இல்லாதபோது மக்களும் கடுமையான வெப்பநிலை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் முடிந்தவரைப் பகல் நேரத்தில் வெளியே செல்லக்கூடாது என்று அவர் அறிவுறுத்தினார்.
நிறையத் தண்ணீர் குடிப்பதும் அவசியம் என்று பேராசிரியர் Karoly குறிப்பிட்டுள்ளார்.