ஆக்ஸ்பாம் தலைமை நிர்வாகி பதவி நீக்கம்
பிரித்தானியாவின் புகழ்பெற்ற சர்வதேசத் தொண்டு நிறுவனமான ஆக்ஸ்பாமின் (Oxfam) தலைமை நிர்வாகியின் நடத்தை மற்றும் முடிவெடுப்பில் கடுமையான சிக்கல்கள் இருப்பதாக சுயாதீன மதிப்பாய்வு கண்டறிந்ததைத் தொடர்ந்து டொக்டர் ஹலிமா பேக் தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
அவர் கொடுமைப்படுத்துதல் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டுள்ளார்.
அவரது நடத்தை நம்பிக்கையை மீறியது என்றும், ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் ஊழியர்கள் கூறியுள்ளனர்.
இந்த விசாரணைக்கு சுமார் 70 ஊழியர்கள் கடிதத்தில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது.
சிலர் கருத்து வேறுபாடு காரணமாக ராஜினாமா செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மதிப்பாய்வு 2025 நவம்பர் முதல் டிசம்பரிற்குள் சட்ட நிறுவனம் ஹவ்லெட் பிரவுனால் நடத்தப்பட்டதாக ஆக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.
மேலும் 32 ஊழியர்கள் மற்றும் ஆவண ஆதாரங்கள் அடிப்படையாகக் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





