அமெரிக்க மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
அமெரிக்காவில் சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வொன்று இந்த விடயத்தை குறிப்பிடுகிறது.
அமெரிக்காவின் தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் நடத்திய ஆய்வில் 27,000க்கும் அதிகமான அமெரிக்கர்கள் பங்கெடுத்தனர்.
நேற்று முன்தினம் வெளிவந்த ஆய்வு முடிவுகளின்படி 9இல் 1 அமெரிக்கர் மட்டுமே சென்ற ஆண்டு புகைபிடித்தார்.
சிகரெட் புகைபிடிப்பவர் எண்ணிக்கை…
– 2021ஆம் ஆண்டில் 12.6 விழுக்காடாக இருந்தது
– 2022ஆம் ஆண்டில் 11.3 விழுக்காடாக குறைந்தது
மின்-சிகரெட்டுகளைப் புகைப்பவர்களின் எண்ணிக்கையோ 4.7 விழுக்காட்டிலிருந்து 5.9 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.
(Visited 6 times, 1 visits today)