அமெரிக்கா – பபுவா நியூகினிக்கு இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம்!
பப்புவா நியூகினிக்கும் அமெரிக்காவுக்கும் இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டது.
பப்புவா நியூகினியாவின் வான்தளங்கள் மற்றும் துறைமுகங்களை அமெரிக்கப் படையினர் பயன்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் அனுமதியளிக்கிறது.
பப்புவா நியூகினியின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப்பியும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளின்கனும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று பப்புவா நியூகினிக்கு விஜயம் செய்யவிருந்தார். இதனையொட்டி பப்புவா நியூகினியில் இன்று விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும்இ ஜப்பானில் நடைபெற்ற ஜ7 உச்சிமாநாட்டின் பின்னர் அவசரமாக அமெரிக்காவுக்குத் திரும்புவதற்காக பப்புவா நியூகினி விஜயத்தை ஜோ பைடன் ரத்துச் செய்தார்.