செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் உரிமையாளரின் கையைக் கடித்த வரிக்குதிரைக்கு நேர்ந்த கதி

அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் நபர் ஒருவர் தாம் வளர்த்து வந்த வரிக்குதிரையால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

72 வயது Ronald Clifton என்பவரின் கையைக் கடுமையாகக் காயப்படுத்தியதாக நம்பப்படும் அந்த வரிக்குதிரை பொலிஸ் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டது.

சம்பவ இடத்திற்குச் சென்றபோது ஒரு பெரிய ஆண் வரிக்குதிரை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாகக் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

அவர் Ronald Cliftonக்கு உதவி அளித்துக்கொண்டிருந்தபோது அந்த வரிக்குதிரை Cliftonனின் குடும்பத்தாரையும் அதிகாரிகளையும் மீண்டும் அச்சுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதைப் பயமுறுத்தித் துரத்திவிடும் முயற்சி பலனளிக்கவில்லை. அதனால் அதன் தலையை நோக்கி அதிகாரி ஒருவர் சுட்டதாகக் கூறப்பட்டது.

அங்கிருந்த சுமார் 6 பெண் வரிக்குதிரைகளைப் பாதுகாப்பதற்காக அந்த ஆண் வரிக்குதிரை அவ்வாறு நடந்துகொண்டிருக்கலாம் என்று பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டனர்.

ஒஹாயோ சட்டத்தின் கீழ், வரிக்குதிரைகள் ஆபத்தான வனவிலங்குகளாக வகைப்படுத்தப்படவில்லை.

அவற்றை வளர்க்கவும் அங்கு அனுமதி உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 3 times, 1 visits today)

dhivyabharathy

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி