அமெரிக்காவில் அதிகரிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை
இந்தியா, சென்ற ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டைவிட அதிக மாணவர்களை அமெரிக்காவில் படிக்க அனுமதி வழங்கியது.
அதே காலக்கட்டத்தில் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்குக் கல்வி கற்க சென்ற மாணவர்களின் எண்ணிக்கை முன்பைவிட குறைவாக இருந்ததாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது..
அமெரிக்காவில் படிக்கும் ஆசிய மாணவர்களில் சீனர்கள், இந்தியர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டில் அமெரிக்காவுக்குப் படிக்கச் சென்ற சீன மாணவர்களின் எண்ணிக்கை 24,796 ஆக குறைந்துள்ளது.
அதேவேளையில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குக் கல்வி கற்க சென்றவர்களின் எண்ணிக்கை 64,300 அதிகமாக இருந்தது என்று அமெரிக்க குடிநுழைவு, சுங்கச்சாவடி அமலாக்கத் துறை வருடாந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க மாநிலங்களிலேயே கலிஃபோர்னியாவில் தான் 225,173 அனைத்துலக மாணவர்கள் கல்வி கற்கிறார்கள்.
இது அமெரிக்காவில் பயிலும் மொத்த வெளிநாட்டு மாணவர்களில் 16.5% ஆகும்.
2021-2022 கல்வி ஆண்டில் அமெரிக்காவில் படித்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 199,182 ஆகும். இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 20% அதிகம்.