செய்தி தமிழ்நாடு

அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரிக்கை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பூத் கமிட்டி அமைப்பது மற்றும் அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி சோமசுந்தரம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றன.

இக்கூட்டத்தில் அதிமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் படிவம் ஊராட்சி பகுதிகளிலும், மாநகர, பேரூராட்சி பகுதிகளிலும் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை பொதுமக்களின் வீட்டுக்கே சென்று பொதுமக்களின் விருப்பத்தோடு அதிமுக உறுப்பினர்களாக சேர்க்கும் பணியினை அதிமுக நிர்வாகிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணியினை தங்கள் ஊராட்சிகளில் உள்ள இளைஞர்களை கொண்டு சிறந்த பயிற்சி அளித்து பொதுமக்களின் வாக்குகளை சரியாக பதிவிட அதிமுக தொண்டர்கள் ஈடுபட வேண்டும் எனவும் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வி சோமசுந்தரம் சிறப்புரையாற்றினார்.

மேலும் அதிமுக புதிய நிர்வாகிகள் சேர்க்கப்பட்ட அடையாள அட்டையினை அவர்களிடமே ஒப்படைத்து வருகின்ற மே மாதம் நடைபெறும் அதிமுக உட்கட்சி தேர்தலில் அனைவரும் பங்கேற்று தங்கள் பணிகள் சிறக்க கிளை செயலாளராகவும் பேரூராட்சி கழக செயலாளராகவும் மாநகர பகுதி கழக செயலாளர் ஆகவும் நியமிக்கப்படுவார் எனவும் இல்லையெனில் அப்பகுதியில் நிர்வாகிகளின் பணிகள் குறித்து கிளை கழகம் பற்றி அமைக்கப்படும் என அதிமுக மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் எச்சரித்து தமிழக அரசியல் கட்சியில் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக அதிமுக விளங்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் குன்றத்தூர் ஒன்றிய கழகச் செயலாளருமான மதனந்தபுரம் பழனி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக மாவட்ட ஒன்றிய பேரூராட்சி மாநகர நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

(Visited 3 times, 1 visits today)

NR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி