செய்தி வட அமெரிக்கா

அதிபர் பைடன் தொடர்பில் மருத்துவர் வெளியிட்ட தகவல்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஏற்பட்டிருந்த தோல் புற்றுநோய் பாதிப்பு சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை மருத்துவர் கெவின் தெரிவித்துள்ளார்.

இந்த சிகிச்சை கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுவதுடன் , பைடனுக்கு மேற்கொண்டு சிகிச்சை தேவையில்லை எனவும் மருத்துவர்  கூறியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடனுக்கு வயது 80. இந்த சூழலில் அவருக்கு மார்பு பகுதியில் தோல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் கெவின் தெரிவித்துள்ளார்.

அதிபருக்கு ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பு பரவக் கூடியது இல்லை என்றும் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர் தெரிவித்தார்.அப்போது அவரது மார்பு பகுதியில் இருந்து அகற்றப்பட்ட சிறிய அளவிலான லிஷன் பயாப்ஸிக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை அடுத்த ஆண்டு நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிபர் ஜோ பைடன் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் உத்தியோகபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

 

(Visited 4 times, 1 visits today)

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி