செய்தி

அதிக தூக்கம், சோர்வு, பலவீனம் – இந்த அறிகுறிகள் இருந்தால் அவதானம்

தூக்கம் என்பது நமது உடல் ஆரோகியத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. ஓயாது உழைக்கும் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கொடுக்கும் நேரம் அது. சிலருக்கு படுத்தவுடன் தூக்கம் வந்துவிடும். ஆனால், சிலரோ தூக்கம் வர அதிக சிரமப்படுகிறார்கள். பொதுவாக தூங்கி எழுந்தவுடன் நாம் புத்துணர்ச்சி பெறுகிறோம். உடலுக்கும் மனதுக்கு நல்ல உத்வேகம் கிடைக்கின்றது.

ஆனால், சில நேரங்களில் இரவு முழுவதும் தூங்கிய பிறகும் உங்களுக்கு போதுமான தூக்கத்தை பெறாதது போன்ற உணர்வு இருக்கும். சில சமயங்களில் காலையில் எழுந்திருக்கவே மனமிருக்காது. நாள் முழுவதும் சோம்பேறித்தனம் இருக்கும். இதற்குக் காரணம் தூக்கமின்மை மட்டுமல்ல. உடலில் வைட்டமின்களின் குறைபாடு இருந்தாலும் இப்படிப்பட்ட நிலை ஏற்படலாம்.

வைட்டமின்கள் குறைபாடு

சில நேரங்களில் உடலில் சில வைட்டமின்களின் குறைபாடு ஏற்படும்போது, ​​உங்கள் தூக்கம் அதிகரிக்கவோ அல்லது குறையவோ தொடங்கும். இதன் காரணமாக நாள் முழுவதும் சோம்பலான உணர்வு இருக்கும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சமநிலையற்ற தன்மையால் முழு உடலும் பாதிக்கப்படுகிறது. சில வைட்டமின்களில் குறைபாடு ஏற்பட்டால், தூக்கம் அதிகமாக வரும். எந்த வைட்டமின் குறைபாடு அதிக தூக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

எந்த வைட்டமின் குறைபாடு அதிக தூக்கத்தை ஏற்படுத்துகிறது?

வைட்டமின் டி:

உடலில் வைட்டமின் டி குறையத் தொடங்கும் போது, ​​அது தூக்கப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. வைட்டமின் டி குறைபாடு நாள் முழுவதும் சோர்வு, பலவீனம் மற்றும் அதிகப்படியான தூக்கத்தை ஏற்படுத்தும். வைட்டமின் டி குறைவாக இருந்தால், ​​உடலில் கால்சியம்-பாஸ்பரஸ் குறைபாடும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக எலும்புகளில் வலி ஏற்படுகிறது. மேலும் இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் பலவீனமடையத் தொடங்குகிறது. இது நாள் முழுவதும் சோம்பேறித்தனமான உணர்வை ஏற்படுத்துகின்றது. எப்போதும் தூக்க கலக்கம் இருந்துகொண்டே இருக்கின்றது. ஆகையால், உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வைட்டமின் பி12:

வைட்டமின் பி12 குறைபாடும் அதிகப்படியான தூக்கத்திற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கக்கூடும். வைட்டமின் பி12 குறைவாக இருந்தால், தூக்கம் அதிகமாக வரும். வைட்டமின் பி12 குறைபாடு நரம்பியல் மற்றும் மனநலப் பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. உடலில் வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் சோம்பேறித்தனம் ஏற்படும் என்று ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. நாள் முழுவதும் தூக்கக்கலக்கத்தில் இருப்பவர்கள் வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு வைட்டமின் பி12 குறைவாக இருக்கும். வயது அதிகரிக்கும் போது, ​​வைட்டமின் பி12 குறைபாட்டின் அளவும் அதிகரிக்கிறது.

தூக்கமின்மைக்கான காரணங்கள்

வைட்டமின் டி மற்றும் பி12 மட்டுமல்லாமல், பல ஊட்டச்சத்துக்களும் தூக்க செயல்முறையை பாதிக்கின்றன. இவற்றில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் அடங்கும். அவற்றின் குறைபாடு உடலில் சோம்பல், சோர்வு மற்றும் பலவீனத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக நீங்கள் நாள் முழுவதும் தூக்கத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. நன்றாக தூங்கிய பிறகும் கூட, உடலில் தளர்வான உணர்வு மற்றும் மயக்கத்தை உணர்கிறோம். நீண்ட காலத்திற்கு இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!