அணைகளுக்காக ஆவேசப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்
அணைக்கட்டு அமைந்துள்ள எந்த குளங்களுக்கும் தண்ணீர் நிரப்பப்படுவதற்கு எந்த அரசாணையும் இல்லை என்பது வருந்தத்தக்கது மட்டுமல்ல வஞ்சிக்கத்தக்கது என சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், குடகனாறு அணையின் மொத்த தண்ணீரின் ஆழம் 27 அடி எனவும் ஆனால் 1977ல் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால்,
masonry dam தவிர இரு பக்கமும் இருந்த மண் அணைகள் உடைந்து ஏராளமான உயிர் சேதங்களும் பொருட் சேதங்களும் ஏற்பட்ட காரணங்களால் ஒரு குழு அமைக்கப்பட்டு அக்குழுவின் பரிந்துரையின் பெயரில் கூடுதலாக பத்து மதகுகள் கொண்ட புதிய இணைப்பு அணை கட்டப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த தண்ணீரானது கரூர் மாவட்டம் வெள்ளியணை ஏரி, ஒப்பிடமங்கலம் ஏரி, மற்றும் வீரராக்கியம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு தண்ணீர் நிரப்பப்படுவதாக கூறிய அவர்,
ஆனால் அணைக்கட்டு அமைந்துள்ள எந்த குளங்களுக்கும் தண்ணீர் நிரப்புவதற்கு எந்த அரசாணையும் இல்லை என்பது வருந்தத்தக்கது மட்டுமல்ல வஞ்சிக்கத்தக்கது எனவும் அவர் கூறினார்.