ஐரோப்பா செய்தி

அணு ஆயுத மோதல் வெடிக்கும்; பிரித்தானியாவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ள புடின்

சீன ஜனாதிபதியை சந்தித்தபின் பிரித்தானியாவுக்கு பகிரங்க மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.

பிரித்தானியா உக்ரைனுக்கு யுரேனியம் கலந்த குண்டுகள் உட்பட ஆயுதங்களைக் கொடுக்குமானால், பிரித்தானியாவுக்கு பதிலடி கொடுக்கும் நிலைமைக்கு ரஷ்யா தள்ளப்படும் என்று எச்சரித்துள்ளார் புடின்.

புடினுடைய எச்சரிக்கையைத் தொடர்ந்து, ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சரான Sergei Shoiguம், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கும் பிரித்தானியாவின் முடிவு, ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் அணு ஆயுத மோதலை உருவாக்கலாம் என எச்சரித்துள்ளார்.+

 

 

விடயம் என்னவென்றால், பிரித்தானியா தற்போது உக்ரைனுக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ள குண்டுகளில் Depleted uranium என்னும் யுரேனியம் சேர்க்கப்பட்டுள்ளது.இந்த யுரேனியம், நச்சுத்தன்மை உடையதும், மனிதர்களின் நுரையீரல் மற்றும் உள்ளுறுப்புகளை பாதிக்கக்கூடியதும் ஆகும்.

இந்த யுரேனியம் கலந்த குண்டுகளின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த யுரேனியம் கலந்த குண்டுகளால், கவச வாகனங்களைக் கூட துளைத்துக்கொண்டு சென்று வெடிக்கச் செய்யமுடியும். ஆகவேதான் ரஷ்யா இப்படி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி